உலகம்

கனடாவை சேர்ந்த காலிஸ்தான் ஆதரவாளர் பயங்கரவாதியாக அறிவிப்பு

Published On 2023-12-30 16:08 GMT   |   Update On 2023-12-30 16:08 GMT
  • இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சதி செயலில் ஈடுபட்டவர்.
  • காலிஸ்தான் ஆதரவாளரான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

பஞ்சாபை சேர்ந்தவர் லக்பீர் சிங் லாண்டா. 33 வயதான இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். காலிஸ்தான் ஆதரவாளரான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

லக்பீர் சிங் லாண்டா இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2021ம் ஆண்டு மொகாலியில் உள்ள பஞ்சாப் போலீஸ் உளவுத்துறை தலைமையகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்.

மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டார்ன் டரனில் உள்ள சர்ஹாலி போலீஸ் நிலையத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் லக்பீர்சிங் லாண்டாவுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் கனடாவை சேர்ந்த பயங்கர வாதிகளின் நெருங்கிய கூட்டாளிகளுடன் தொடர்புடைய 48 இடங்களில் பஞ்சாப் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனையின்போது ஒரு வியாபாரியிடம் லாண்டா ஹரிகே என்ற பெயரில் 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சதி செயலில் ஈடுபட்டு வரும் லக்பீர் சிங் லாண்டாவை தற்போது பயங்கரவாத என மத்திய உள்துறை அமைச்சம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News