உலகம்
null

பயணங்கள் முடிவதில்லை!.. உலக சுற்றுலா தினம் உணர்த்தும் மகத்துவமான உண்மை

Published On 2025-09-27 10:56 IST   |   Update On 2025-09-27 19:06:00 IST
  • "உலகம் ஒரு புத்தகம், பயணம் செய்யாதவர்கள் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறார்கள்." - செயிண்ட் அகஸ்டின்
  • "பயணம் உங்கள் வாழ்க்கையில் சக்தியையும் அன்பையும் மீண்டும் கொண்டுவருகிறது." - ரூமி

தினம் பின் தூங்கி முன் எழுந்து வாரம் முழுவதும் அலுவலகத்துக்கு வீட்டுக்கும் இடையில் பலரின் பயணம் முடிந்துவிடுகிறது.

வார விடுமுறை, பண்டிகை விடுமுறை, தொடர் விடுமுறை எப்போதும் வரும் என காத்திருப்பவர்களே அதிகம்.

இந்த சூழலில் வருடத்திற்கு ஒரு முறை வரும் உலக சுற்றுலா தினம், அதாவது செப்டம்பர் 27 முக்கியத்துவம் வாய்ந்ததாகி உள்ளது.

ஏனெனில் நாம் விரும்பியபடி பயணம் செய்ய வாய்ப்பு கிடைகப்பெற்ற சுதந்திரமான மனிதர்கள் என்று நமக்கு நினைவூட்டிக்கொள்ள இப்படி ஒரு தினம் தேவையாக உள்ளது.

கூண்டுக்குள் வாழ்ந்து பழகிய கிளிக்கு சுதந்திரம் என்பது தண்டனையாகவும் இருக்கலாம். ஆனால் மனித இனத்திற்கு பயணம் என்பது இன்றியமையாதது.

அதிலும் சுற்றுலா என்பது வெறும் பயணம் மட்டுமல்ல. அது புதிய கலாச்சாரங்களை கண்டறிவதும் புதிய மக்களைச் சந்திப்பதும் என்றென்றும் நிலைத்திருக்கும் நினைவுகளை உருவாக்குவதும் ஆகும். அது ஆன்மீக தேடலாகவும் உள்நோக்கிய பயணமாகவும் இருக்கலாம்.

இருப்பது ஒரு வாழ்க்கை, இதில் நாம் வாழும் இந்த அழகான உலகத்தின், இயற்கையின் பிரமிப்புகளை கண்ணுற்று காணும் வாய்ப்பு ஒவ்வொரு மனிதனுக்குமான உரிமை.

சுற்றுலாவின் மகத்துவத்தை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உருவான இந்த தினத்தில் மனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் அதன் இன்றியமையாமையும் உற்று நோக்கத்தக்கது.

இந்த வருட உலக சுற்றுலா தினத்திற்கான கருப்பொருள் 'சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்' ஆகும்.

"உலகம் ஒரு புத்தகம், பயணம் செய்யாதவர்கள் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறார்கள்." - செயிண்ட் அகஸ்டின்

"பயணம் உங்கள் வாழ்க்கையில் சக்தியையும் அன்பையும் மீண்டும் கொண்டுவருகிறது." - ரூமி 

"ஆயிரம் மைல்கள் பயணம் ஒரு அடியுடன் தொடங்குகிறது." - லாவோ சூ

Tags:    

Similar News