உலகம்

காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் பலி

Published On 2025-04-06 23:31 IST   |   Update On 2025-04-06 23:31:00 IST
  • காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
  • இதனால் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

காசா:

காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 5 பேர் குழந்தைகள் என்றும், 12 பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News