இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் போர் நடைபெற்று வரும் நிலையில், போர் இடைநிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் நேற்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்டன் இஸ்ரேல் சென்றிருந்தார். அவரிடம், போர் இடைநிறுத்தத்திற்கு நேதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் வரை முன்னோக்கி சென்று கொண்டிருப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
காசாவில் போர் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன தொழிலாளர்களை திருப்பி அனுப்பியுள்ளது
போரில் பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப அழைத்துள்ளது ஹோண்டுராஸ்
சேமித்து வைக்கப்பட்டிருந்த மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட இரண்டு துண்டு அரபிக் ரொட்டியுடன் காசா மக்கள் வசித்து வருவதாகவும், தெருக்களில் தண்ணீர், தண்ணீர் எனற சத்தம் இன்னும் தவிர்க்கப்படவில்லை என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி எல்லையை கடந்து சென்ற பாலஸ்தீனியர்களில் 14 பேர் கொல்லப்பட்டனர் என ஹமாஸ் அமைப்பின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
ஹமாஸ் அமைப்பு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஜனநாயகத்தின்படி குடிமக்களை பாதுகாப்பதற்கான கடமை உள்ளது என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டார்.
ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை மீண்டும் தெரிவிக்கும் வகையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று இரண்டாவது முறையாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் இதுவரை 31 பாலஸ்தீனியர்கள், 4 இஸ்ரேலியர்கள் மற்றும் லெபனானைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 36 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் எல்லையில் தாக்குதல் நடத்திய நிலையில், லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை காசாவில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.