உலகம்
null

இஸ்ரேல் மட்டுமே எங்களின் முதல் இலக்கு: ஹமாஸ் கமாண்டர் எச்சரிக்கை

Published On 2023-10-12 14:12 IST   |   Update On 2023-10-12 14:12:00 IST
  • உலகம் முழுவதும் எங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதே எங்களின் நோக்கம்.
  • முழு பிரபஞ்சமும் எங்கள் சட்டத்தின் கீழ் இருக்கும்.

இஸ்ரேல்-காசா மோதல் நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் மஹ்மத் அல் ஜஹார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:-

இஸ்ரேல் தான் எங்களின் ஆரம்ப இலக்கு. உலகம் முழுவதும் எங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதே எங்களின் நோக்கம். முழு பிரபஞ்சமும் எங்கள் சட்டத்தின் கீழ் இருக்கும்.

லெபனான், சிரியாவில் உள்ள அனைத்து அரபு நாடுகளின் பாலஸ்தீனியர்கள் மற்றும் அரேபியர்களுக்கு எதிராக அநீதி, அடக்குமுறை மற்றும் கொலைகள், குற்றங்கள் இல்லாத 510 மில்லியன் சதுர கிலோ மீட்டர் கொண்ட நிலப்பரப்பு ஒரு அமைப்பின் கீழ் வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பொதுமக்களை பிணை கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் காசாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பிணை கைதியை அனுப்பி அவர்களை தூக்கிலிட போவதாகவும் அச்சுறுத்தி உள்ளனர். ஆனால் இதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News