உலகம்

புதிய வரிகளை விதிக்கிறாரா டிரம்ப்?

Published On 2025-12-09 08:17 IST   |   Update On 2025-12-09 08:17:00 IST
  • மானிய விலையில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறினர்.
  • இந்திய அரிசிகள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதாக டிரம்ப் குற்றச்சாட்டினார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவி நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தார்.

மேலும், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. மேலும், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.

இந்த நிலையில், இந்திய அரிசி, கனடா உரங்கள் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.

வெள்ளை மாளிகையில் விவசாய பிரதிநிதிகளுடன் அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். அப்போது விவசாயிகள், மானிய விலையில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறினர். இதற்கு டிரம்ப், இந்த பிரச்சனையை கவனித்துக்கொள்வதாக அவர்களுக்கு உறுதியளித்தார். அமெரிக்க சந்தைகளை பாதிக்கும் நாடுகள் குறித்து அடையாளம் காணுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

மேலும், இந்திய அரிசிகள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதாக டிரம்ப் குற்றச்சாட்டினார். 

Tags:    

Similar News