உலகம்

புவிசார் அரசியலில் பின்னடைவு... தஜிகிஸ்தானின் அயினி விமான தளத்தை விட்டு வெளியேறியது இந்தியா

Published On 2025-11-01 17:48 IST   |   Update On 2025-11-01 17:48:00 IST
  • அயினி தளத்தில் 2002 முதல் இந்தியா செயல்பட்டு வந்தது.
  • 2022ல் இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்தியாவின் ஒரே தனித்துவமான வெளிநாட்டு விமான தளமாக விளங்கிய தஜிகிஸ்தானில் உள்ள அயினி விமான தளத்தை விட்டு இந்திய ராணுவம் வெளியேறியது.

மத்திய ஆசியாவின் மூலோபாய மூக்கியத்துவம் வாய்ந்த பகுதியான அயினி தளத்தில் 2002 முதல் இந்தியா செயல்பட்டு வந்த நிலையில், 2022ல் ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா மற்றும் ரஷ்யாவின் அழுத்தம் காரணமாக இந்தியா உடனான இருதரப்பு ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தஜிகிஸ்தானின் இந்த முடிவு புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News