உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை- துபாயில் விமானங்கள் திருப்பி விடப்பட்டன

Published On 2024-04-17 02:56 GMT   |   Update On 2024-04-17 02:56 GMT
  • கனமழையால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு.
  • கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை நாளை வரை நீடிக்கும் என ஐக்கிய அரபு அமீரக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

நாளை வரை கனமழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மழைநீர் புகுந்துள்ளது. மேலும், கனமழை நீடிக்கும் என்பதால் துபாய்க்கு வரவிருந்த 100க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.

Tags:    

Similar News