உலகம்

இஸ்ரேலுக்கான ராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி தடையை நீக்கியது ஜெர்மனி

Published On 2025-11-17 15:23 IST   |   Update On 2025-11-17 15:23:00 IST
  • காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஜெர்மனி தடைவிதித்தது.
  • வருகிற 24-ந்தேதி முதல் இந்த தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்காணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

தங்கள் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு ஏற்றுமதியாகும் ராணுவ உபகரணங்கள் காசாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்பதால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஜெர்மனி தடைவிதித்தது.

இந்த நிலையில் தற்போது இந்த தடையை ஜெர்மனி நீக்கியுள்ளது. வருகிற 24-ந்தேதி முதல் இந்த நீக்கம் நடைமுறைக்கு வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே கடந்த மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனால் காசா மீது போர் பிரகடனம் அறிவித்து இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

Tags:    

Similar News