உலகம்

ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர்

மெக்சிகோ எல்லையில் பயங்கர வன்முறை- 11 பேர் உயிரிழப்பு

Published On 2022-08-13 09:08 GMT   |   Update On 2022-08-13 09:08 GMT
  • தெருக்களில் நடந்த வன்முறையில் வானொலி நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டனர்.
  • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜுவாரசில் நடந்த பயங்கர கலவர காலத்தை நினைவுபடுத்தியது.

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ எல்லைப்பகுதியில் உள்ள சியூதத் ஜூவாரஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரு குழுவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.

இந்த தகவல் வெளியில் பரவியதையடுத்து, நகர வீதிகளில் இரு குழுவினரிடையே கலவரம் மூண்டது. ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். பொதுமக்களும் தாக்கப்பட்டனர். வணிக நிறுவனங்களுக்கு தீவைக்கப்பட்டன. இந்த வன்முறையில், வானொலி நிலையத்தின் 4 ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறையியானது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜுவாரசில் நடந்த பயங்கர கலவர காலத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது.

மெக்சிகோவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போதைப்பொருள் விற்பனையாளர்கள், தொழிலை பாதுகாக்கவும், தங்களுக்கு போட்டியாக உள்ளவர்கள் மற்றும் எதிரிகளை பழிவாங்கவும், உள்ளூரில் செயல்படும் குழுக்களை பயன்படுத்துகின்றனர். இதனால் தொடர்ந்து வன்முறைகள் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News