உலகம்

ராஃபாவில் புதிய நகரத்தை உருவாக்கும் இஸ்ரேல்.. இன அழிப்புக்கான வதை முகாம் என முன்னாள் பிரதமர் எச்சரிக்கை

Published On 2025-07-15 05:53 IST   |   Update On 2025-07-15 05:53:00 IST
  • ஆரம்பத்தில் 600,000 மக்களையும், இறுதியில் முழு பாலஸ்தீன மக்களையும் தங்க வைக்க இந்நகரம் தயாராகி வருகிறது.
  • திட்டமிடப்பட்ட அந்நகரத்தை ஹிட்லரின் வதை முகாம்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.

















தெற்கு காசாவில் உள்ள ராஃபாவில் இடிபாடுகளில் 'மனிதாபிமான நகரம்' ஒன்றை கட்டும் திட்டத்தை காட்ஸ் முன்மொழிந்தார்.

தெற்கு காசாவின் இடிபாடுகளில் ஒரு "மனிதாபிமான நகரத்தை" நிர்மாணிப்பதற்கான செயல்பாட்டுத் திட்டங்களை வகுக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நகரத்திற்கு உள்ளே நுழைந்ததும், பாலஸ்தீனியர்கள் மற்ற நாடுகளைத் தவிர வேறு நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று காட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் 600,000 மக்களையும், இறுதியில் முழு பாலஸ்தீன மக்களையும் தங்க வைக்க இது தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

 இந்நிலையில் இஸ்ரேல் உருவாக்க நினைக்கும் நகரம் ஒரு வதை முகாமாக இருக்கும் என்றும் பாலஸ்தீனியர்களை அங்கு வைப்பது இன அழிப்புக்கு சமம் என்று இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் கூறினார்.

இஸ்ரேல் ஏற்கனவே காசா மற்றும் மேற்குக் கரையில் போர்க்குற்றங்களைச் செய்து வருகிறது. இந்த முகாம் கட்டுவது அந்தக் குற்றங்களில் பெரிய அளவில் அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஓல்மெர்ட் கூறினார்.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு "மனிதாபிமான நகரம்" திட்டத்தை ஆதரிக்கிறார். காசாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை அகற்ற அவர்கள் ஒரு முகாமைக் கட்டும் அதே வேளையில், பாலஸ்தீனியர்களைக் காப்பாற்றுவது அவர்களின் குறிக்கோள் அல்ல, மாறாக அவர்களை நாடு கடத்துவதும் தூக்கி எறிவதுதான் என்று ஓல்மெர்ட் கூறினார்.

இஸ்ரேலிய மனித உரிமை செயல்பாட்டாளர்களும் இந்தத் திட்டத்தை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான ஒரு வரைபடம் என்று விவரித்துள்ளனர்.

இது செயல்படுத்தப்பட்டால் இனப்படுகொலைக்கு சமமாகிவிடும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் பலர் திட்டமிடப்பட்ட அந்நகரத்தை ஹிட்லரின் வதை முகாம்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். 

Tags:    

Similar News