உலகம்

இலங்கை அதிபரை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்

இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு

Published On 2022-06-23 18:16 GMT   |   Update On 2022-06-23 18:16 GMT
  • இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்துப் பேசினாா்.
  • கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது.

கொழும்பு:

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும், இந்தியாவின் ஆதரவு குறித்தும் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்தன. மேலும், இலங்கையில் முதலீடுகளை ஊக்குவித்தல், பொருளாதார தொடர்பை வலுப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவ, இந்தியா தயாராக இருப்பதாக அவா்கள் தொிவித்தனா்.

இந்தச் சந்திப்பின் மூலம் இருநாட்டு உறவுகளும் மேம்படுத்துவதற்கான உறுதியை இருதரப்பினரும் உறுதிபடுத்தி உள்ளனர் என மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டாில் தொிவித்துள்ளாா்.

Tags:    

Similar News