உலகம்

VIDEO: 14 விநாடிகளிலேயே தரையில் விழுந்த ராக்கெட் - ஆஸ்திரேலியாவின் முதல் முயற்சி தோல்வி

Published On 2025-07-31 08:49 IST   |   Update On 2025-07-31 08:49:00 IST
  • கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜிஸால் இந்த எரிஸ் ராக்கெட் ஏவப்பட்டது.
  • ராக்கெட் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

ஆஸ்திரேலியா முதன்முறையாக விண்ணில் செலுத்த முயன்ற ராக்கெட் முயற்சி தோல்வியில் முடிந்தது. வானில் பறந்த ராக்கெட் 14 விநாடிகளிலேயே தரையில் விழுந்த விபத்துக்குள்ளானது.

கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜிஸால் ஏவப்பட்ட இந்த எரிஸ் ராக்கெட் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்த முயன்ற முதல் ராக்கெட் ஆகும். இது சிறிய செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டது.

ராக்கெட் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

Similar News