உலகம்

ஈக்வடார் நாட்டில் ரோப் கார்களில் திடீர் பழுது- சுற்றுலா பயணிகள் 75 பேர் பத்திரமாக மீட்பு

Published On 2023-07-08 08:17 GMT   |   Update On 2023-07-08 08:17 GMT
  • மின்கசிவு காரணமாக கணினி முடங்கியதால் ரோப் கார்கள் நின்றுவிட்டன.
  • 10 மணி நேர போராட்டத் துக்கு பிறகு 75 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.

ஈக்வடார்:

ஈக்வடார் தலைநகர் குயிட்டோவில் உலகின் மிக உயரமான சுற்றுலா ரோப் கார் வசதி உள்ளது. மலைப்பகுதியில் 2½ கிலோ மீட்டர் வரை பயணிக்கக் கூடிய கேபிள் கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் ரோப் கார்கள் செல்கின்றன. இந்த நிலையில் ரோப் கார்களில் சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பழுது ஏற்பட்டதால் நடுவழியில் சிக்கி கொண்டனர்.

மின்கசிவு காரணமாக கணினி முடங்கியதால் ரோப் கார்கள் நின்றுவிட்டன. கோளாறை சரி செய்து ரோப் கார்களை உடனடியாக இயக்க முடியவில்லை. இதையடுத்து சுற்றுலா பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். கயிறுகள் மூலம் ரோப் கார்களில் தவித்தவர்கள் பத்திரமாக கீழே கொண்டு வரப்பட்டனர். 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 75 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.

சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று குயிட்டோ நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

Tags:    

Similar News