உலகம்
என் மகன் பெயரின் நடுவில் 'சேகர்' என்பதை சேர்த்துள்ளேன் - காரணம் கூறிய எலான் மஸ்க்
- திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெற்ற நன்மைகள் ஏராளம்.
- என் வாழ்க்கத்துணை ஷிவோன் ஜிலிஸ் கூட பாதி இந்தியர் தான்
Zerodha இணை நிறுவனர் நிகில் காமத்தின் பாட்காஸ்டில் உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தனது மனைவி, குடும்பம் குறித்து விரிவாக பேசியுள்ளார்.
அந்த பாட்காஸ்டில் பேசிய எலான் மஸ்க், "திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெற்ற நன்மைகள் ஏராளம். இவ்வளவு ஏன் என் வாழ்க்கத்துணை ஷிவோன் ஜிலிஸ் கூட பாதி இந்தியர் தான். அவர் கனடாவில் வளர்ந்தாலும், குழந்தையிலேயே தத்து கொடுக்கப்பட்டவர். இதுகுறித்த முழு தகவல் தெரியவில்லை.
அதேபோல நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்கர் சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாக என் மகனின் பெயரில் ஒரு பகுதிக்கு 'சேகர்' என சூட்டியுள்ளேன்" என்று தெரிவித்தார்.