உலகம்

தஞ்சம் அடைவோர் எண்ணிக்கையை குறைக்க முடிவு: கூட்டணி கட்சிகள் எதிர்ப்பால் நெதர்லாந்து பிரதமர் ராஜினாமா

Published On 2023-07-08 06:55 IST   |   Update On 2023-07-08 06:55:00 IST
  • நாட்டில் தஞ்சம் கேட்போரின் எண்ணிக்கையை குறைக்க ருடே முடிவு
  • எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ருடே தனது பதவியை ராஜினாமா செய்தார்

நெதர்லாந்தில் மார்க் ருடே நான்கு கட்சிகள் கூட்டணி ஆதரவில் பிரதமராக இருந்து வந்தார். புலம்பெயர்ந்து நெதர்லாந்துக்கு வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் இந்த கூட்டணி கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்பாடாமல் மோதல் முற்றியது. ருடே சமரசம் செய்ய கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதில் ரகசியம் ஒன்றுமில்லை. இடம்பெயர்வு கொள்கையில் கூட்டணி கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்து நிலவியது. தேர்தல் நடைபெறும் வரை மந்திரி சபை (காபந்து அரசு) தொடரும்' என ருடே தெரிவித்தார்.

இதன் காரணமாக 150 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த வருட இறுதிக்குள் தேர்தல் நடைபெற இருக்கிறது. ருடே நெதர்லாந்தின் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்தில் அடைக்கலம் கேட்டு வருபோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு 47 ஆயிரம் தஞ்சம் அடைய அனுமதி கேட்ட நிலையில், இந்த வருடம் அது இந்த வருடம் 70 ஆயிரமாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

இதை கட்டுக்குள் கொண்டுவர மாதத்திற்கு 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும் என ருடே தலைமையிலான கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், தற்போது ஆட்சி கவிழ்ந்துள்ளது.

Tags:    

Similar News