உலகம்

இங்கிலாந்தில் வரலாறு காணாத வறட்சி - வறண்டு போன தேம்ஸ் நதி

Published On 2022-08-12 21:05 GMT   |   Update On 2022-08-12 21:05 GMT
  • இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் ஆறு இதுவரை இல்லாத அளவுக்கு வறண்டுள்ளது.
  • நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி நிலவியது.

லண்டன்:

இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் ஏற்பட தொடங்கியது. தேம்ஸ் நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது.

1935-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் திகழ்கிறது. ஜூலை மாதத்தில் மழை பொழிவு மிகவும் குறைவு என இங்கிலாந்து வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலையில் வறட்சி நிலவியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இங்கிலாந்தின் தெற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லண்டன் நகரம் முழுதும் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வறண்ட காலநிலைக்கு நாங்கள் முன்பை விட சிறப்பாக தயாராக இருக்கிறோம், ஆனால் பாதிப்புகள் உள்பட நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News