உலகம்

ரஷிய கடற்படை தலைமையகத்தில் டிரோன் தாக்குதல் - 6 பேர் காயம்

Published On 2022-07-31 23:10 GMT   |   Update On 2022-07-31 23:10 GMT
  • உக்ரைன் மீது ரஷியா பிப்ரவரி 24-ம் தேதி போரை தொடங்கியது.
  • போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மாஸ்கோ:

உக்ரைன், ரஷியா இடையிலான போர் 150 நாளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்தப் போரில் ரஷியாவின் கருங்கடல் கடற்படை முக்கிய பங்கு வகித்து வருகிறது.

கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷிய போர்க்கப்பல்கள் உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனுக்குச் சொந்தமான கிரீமியா தீபகற்பத்தில் உள்ள செவஸ்டோபோல் நகரில் ரஷிய கருங்கடல் கடற்படையின் தலைமையகம் அமைந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை இந்த கடற்படை தலைமையகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. டிரோன் மூலம் குண்டு வீசப்பட்டதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷியாவில் நேற்று கடற்படை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News