உலகம்

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எப்போதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது - டிரம்ப்

Published On 2025-04-26 08:42 IST   |   Update On 2025-04-26 08:42:00 IST
  • பஹல்காம் தீவிரவாத தாக்குதல் ஒரு மோசமான தாக்குதல்.
  • இரு நாட்டு தலைவர்களையும் நான் அறிவேன்.

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22-ந்தேதி தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர்.

மிருகத்தனமான இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் ஒரு மோசமான தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸின் இறுதி சடங்கிற்காக ரோமுக்கு பயணம் செய்தபோது செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறுகையில், இது சமீபத்திய காலங்களில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த மிகக் கொடிய தாக்குதலாகும். நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், பாகிஸ்தானுடனும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், உங்களுக்குத் தெரியும். மேலும் அவர்கள் காஷ்மீரில் 1,000 ஆண்டுகளாக அந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அநேகமாக அதை விட நீண்ட காலம் இருக்கலாம். இரு நாட்டு தலைவர்களையும் நான் அறிவேன். அவர்கள் இதற்கு ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ தீர்வை கண்டுபிடித்துவிடுவார்கள். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எப்போதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது என்றார்.



Tags:    

Similar News