உலகம்

WFH-ல தான இருக்கீங்க.. ப்ரோமோஷன் கேட்காதீங்க - டெல்

Published On 2024-03-19 13:59 GMT   |   Update On 2024-03-19 13:59 GMT
  • பலர் இன்றும் வீட்டிலே இருந்தே பணியாற்றி வருகின்றனர்.
  • ஊழியர்கள் அலுவலகம் சென்று பணியாற்ற துவங்கினர்.

சர்வதேச சந்தையில் முன்னணி லேப்டாப் பிராண்டு டெல். உலகளவில் பல்வேறு அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் டெல் நிறுவனத்திற்காக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் இன்றும் வீட்டிலே இருந்தே பணியாற்றி வருகின்றனர்.

உலகம் முழுக்க கொரோனா பெருந்தொற்று காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. பிறகு, பெருந்தொற்று சூழல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து உலகின் பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை ஆதரிக்கவில்லை. இதன் காரணமாக ஊழியர்கள் அலுவலகம் சென்று பணியாற்ற துவங்கினர்.

இந்த நிலையில், டெல் நிறுவனம் வீட்டில் இருந்தே பணியாற்றும் தனது ஊழியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெற முடியாது என தெரிவித்துள்ளது. ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும் என்றும் டெல் தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்து பணியாற்றுவோர் பதவி உயர்வு மற்றும் நிறுவனத்திற்குள் தங்களது பொறுப்பை மாற்றிக் கொள்ளவும் முடியாது.

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பில் இருந்தே ஊழியர்கள் வீட்டில் இருந்தும் பணியாற்ற அனுமதி அளித்த நிலையில், டெல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு வீட்டில் இருந்து பணியாற்றி வரும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. டெல் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக வீட்டில் இருந்து பணியாற்றி வருவோருக்கு, இனிமேல் பதவி உயர்வு, பதவிகளை மாற்றிக் கொள்ள முடியாது என்ற அறிவிப்பு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News