உலகம்

உயிரியல் பூங்காவில் புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலா பயணிகள்

Published On 2025-06-16 13:55 IST   |   Update On 2025-06-16 13:55:00 IST
  • புலியின் உரோமம் தீய சக்திகளை அகற்றும் என சீனாவில் நம்பப்படுகிறது.
  • சுற்றுலா பயணிகளின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

சீனாவின் லியானிங் மாகாணத்தில் உயிரியல் பூங்காவில், ஓய்வெடுத்து கொண்டிருந்த புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலா பயணிகளின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

புலியின் உரோமம் தீய சக்திகளை அகற்றும் என அந்நாட்டில் நம்பப்படுவதால் சுற்றுலா பயணிகள் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதால் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என பூங்கா நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags:    

Similar News