உலகம்
null

பிலிப்பைன்ஸ் படகு மீது சீனா தாக்குதல்-பிலிப்பைன்ஸ் ராணுவம் கண்டனம்

Published On 2024-03-24 03:09 GMT   |   Update On 2024-03-24 03:11 GMT
  • படகில் உள்ளவர்களுக்கு சிறிய படகுகள் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.
  • சர்ச்சைக்குரிய இரண்டாவது தாமஸ் ஷோல் பகுதி பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென்சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதேசமயம் பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன. குறிப்பாக சர்ச்சைக்குரிய இரண்டாவது தாமஸ் ஷோல் பகுதி பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான படகுகள் அங்கு ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. அந்த படகில் உள்ளவர்களுக்கு சிறிய படகுகள் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.

அந்தவகையில், நேற்று பிலிப்பைன்சுக்கு சொந்தமான சிறிய படகு சென்றபோது சீன போர்க்கப்பல்கள் அவர்கள் மீது தண்ணீர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த படகு பலத்த சேதம் அடைந்தது. சீனாவின் இந்த தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸ் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது இந்த மாதத்தில் நடைபெற்ற சீனாவின் 2-வது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News