உலகம்

காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியா மீது குற்றச்சாட்டு: உயர் தூதர் அதிகாரியை வெளியேற்றியது கனடா

Published On 2023-09-19 01:49 GMT   |   Update On 2023-09-19 06:20 GMT
  • ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார்
  • இவரது கொலையில் இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் கனடா நாட்டில் அதிக அளவில் உள்ளனர். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கனடா தெரிவிக்கப்பட்ட போதிலும், அங்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.

இதனால்தான் ஜி20 மாநாட்டின்போது, பிரதமர் மோடி- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையே மகிழ்ச்சிகரமான பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் உயர் தூதர் அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றியுள்ளது. ஏற்கனவே இந்தியா- கனடா இடையிலான ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் கூட்டிய பாராளுமன்ற அவசர செசனில் ''நாடுகடத்தப்பட்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்டதில் இந்திய ஏஜென்ட்-களுக்கு தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டு உள்ளன.

கனடா மண்ணில் கனடா குடியுரிமை பெற்ற ஒருவர் கொலையில் வெளிநாட்டு அரசின் தலையீடு ஏற்றுக் கொள்ள முடியாதது. இது நாட்டின் இறையாண்மையை மீறுவதாகும். இந்த விசயத்தை தெளிப்படுத்த இந்தியா ஒத்துழைக்க வேண்டும்'' என்றார்.

கனடா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மெலானி ஜூலி ''ஜஸ்டின் ட்ரூடோ அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம். அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர்'' என்றார்.

Tags:    

Similar News