உலகம்

மருத்துவமனை மீது தாக்குதல் எதிரொலி: அரபு தலைவர்கள் உடனான ஜோ பைடன் சந்திப்பு ரத்து

Published On 2023-10-18 11:13 IST   |   Update On 2023-10-18 11:13:00 IST
  • காசா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்
  • அரபு தலைவர்களை இன்று ஜோர்டானில் சந்தித்து பேச இருந்தார் ஜோ பைடன்

ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காசாவில் உள்ள மக்கள் ஏவுகணை தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காசாவில் உள்ள மருத்துவமனை ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் தாக்கியதாக காசா மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதேவேளையில், பாலஸ்தீனத்தில் இருந்து தவறாக கையாளப்பட்ட ஏவுகணை வெடிப்பால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது என்று இஸ்ரேல் கூறி வருகிறது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேல் செல்லும் அவர், கடந்த 7-ந்தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிராக தங்களுடைய ஆதரவை இஸ்ரேலுக்கு தெரிவிக்க இருக்கிறார். மேலும், காசா ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஜோ பைடன் ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர், பாலஸ்தீன தலைவர் ஆகியோரை சந்தித்து பேச இருந்தார்.

இதனால் காசா- இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு ஜோ பைடன் அமெரிக்கா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News