உலகம்

சட்டை அணியாமல் கடற்கரையில் வலம் வந்த ஜோ பைடன்

Published On 2023-08-02 11:08 IST   |   Update On 2023-08-02 11:08:00 IST
  • அமெரிக்காவில் டெலாவேர் பகுதியில் ஜோ பைடனுக்கு ரெஹோபாத் என்ற விடுமுறை கால சொகுசு பங்களா உள்ளது.
  • ஜோ பைடனின் சட்டை அணியாத புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தற்போது 80 வயது ஆகிறது. ஆனாலும் அவர் சுறுசுறுப்புடன் இருக்கிறார். இந்நிலையில் ஜோ பைடன் சட்டையின்றி நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் டெலாவேர் பகுதியில் ஜோ பைடனுக்கு ரெஹோபாத் என்ற விடுமுறை கால சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவை ஒட்டிய கடற்கரைக்கு சென்ற ஜோ பைடன் சட்டையின்றி நின்றார். கடற்கரையில் பெண்கள் இருந்த நிலையில் ஜோ பைடன் சட்டையின்றி நீல நிற ஷார்ட், கருப்பு நிற தொப்பி, சன் கிளாஸ் அணிந்து சூரிய கதிர்கள் தன் மீது படும் வகையில் நின்றது தெரியவந்தது.

ஏற்கனவே ரஷிய அதிபர் புதின் சட்டையின்றி குதிரையில் பயணித்த புகைப்படமும், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், சில்வெஸ்டர் ஸ்டோலன் உடலில் தனது முகத்தை ஒட்டி வெளியிட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உள்ளது. இந்நிலையில் ஜோ பைடனின் சட்டை அணியாத புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News