உலகம்

நேபாளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து மீது தாக்குதல்..

Published On 2025-09-12 13:41 IST   |   Update On 2025-09-12 13:43:00 IST
  • பயணிகளின் மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்தனர்.
  • நேபாள ராணுவம் அவர்களை மீட்டது.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர். நேற்று பசுபதிநாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து பேருந்தில் திரும்பிகொண்டிருந்த அவர்களை சோனாலி அருகே கும்பல் ஒன்று வழிமறித்தது.

முதலில் மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி, பின்னர் பயணிகளின் மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்தனர். இதில் 8 பேர் காயமடைந்தனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு நேபாள ராணுவம் அவர்களை மீட்டு, இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தது.

இந்திய அதிகாரிகள் அனைவரையும் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News