உலகம்

இந்தோனேசியாவில் சொகுசு கப்பல் தீ விபத்து: 5 பேர் பலி

Published On 2025-07-21 03:51 IST   |   Update On 2025-07-21 03:51:00 IST
  • இந்தோனேசியா சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
  • இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 250-க்கும் மேற்பட்டோர் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர்.

தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்டு மனாடோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தீ பற்றியது.

தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர், பேரிடர் கால மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக கப்பலில் எழுந்த புகை விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது.

இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

விபத்து குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News