உலகம்

கேளிக்கை விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம்- துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் பலி

Published On 2023-04-17 00:46 IST   |   Update On 2023-04-17 00:46:00 IST
  • படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டெடிவிலி பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஒரு நபரின் 16வது பிறந்தநாள் விழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏராளமானோருக்கு கேளிக்கை விடுதியில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பார்ட்டியில் சிறுவர்கள், சிறுமிகள் என பலர் பங்கேற்றனர்.

அப்போது பார்ட்டியில் பங்கேற்றவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? அவர் கைது செய்யப்பட்டாரா? 16வது பிறந்தநாளை கொண்டாடியது சிறுவனா? சிறுமியா? என்பது குறித்த விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

Tags:    

Similar News