உலகம்
அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச்சூடு- 3 பேர் காயம்
- அதிர்ச்சியடைந்த மக்கள் உயிரை காத்துக்கொள்வதற்காக அங்குமிங்கும் சிதறி ஓடினர்.
- துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கம் உள்ளது. இந்த சதுக்கத்தில் நேற்று அதிகாலை 1.20 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கண்ணில் பட்ட அனைவரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் உயிரை காத்துக்கொள்வதற்காக அங்குமிங்கும் சிதறி ஓடினர். எனினும் இந்த பயங்கர சம்பவத்தில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.