உலகம்

அமெரிக்காவில் மீண்டும் சோகம் - பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உள்பட 7 பேர் பலி

Update: 2023-03-27 19:04 GMT
  • அமெரிக்காவின் நாஷ்வில்லேவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
  • இந்த தாக்குதலில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர் பலியாகினர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் 3 மாணவர்களையும், 3 பெரியவர்களையும் கொன்றதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News