உலகம்
ஜாக் டோர்ஸி

டுவிட்டர் இயக்குநர் குழுவில் இருந்து ஜாக் டோர்ஸி திடீர் விலகல்

Published On 2022-05-26 08:34 GMT   |   Update On 2022-05-26 10:33 GMT
கடந்த சில மாதங்களுக்கு முன் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதாக முன்வந்தார்.
கலிபோர்னியா:

கடந்த 2006-ஆம் ஆண்டு ஜாக் டோர்ஸி டுவிட்டர் நிறுவனத்தை உருவாக்கியதில் இருந்து அதன் சி.இ.ஓ-ஆக செயல்பட்டு வந்தார். 

இநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் தனது சி.இ.ஓ பொறுப்பை துறந்தார். அதன்பின் இந்தியரான பராக் அகர்வால் டுவிட்டரின் புதிய சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் முன்வந்தார். 

ஆனால் எலான் மஸ்கிற்கும், டுவிட்டர் சி.இ.ஓ பராக் அகர்வாலுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வந்தது. பராக் அகர்வால் டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்து உண்மையை மறைத்து வருவதாக குற்றம்சாட்டிய எலான் மஸ்க், டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். 

இந்நிலையில் பராக் அகர்வாலுக்கு பதில், ஜாக் டோர்ஸி மீண்டும் சி.இ.ஓ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது. 

இந்த நிலையில் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இருந்து விலகுவதாக ஜாக் டோர்ஸி தெரிவித்துள்ளார். இனி மீண்டும் சிஇஓ பொறுப்புக்கு மீண்டும் வரமாட்டேன் என்பதையும் டோர்ஸி தெளிவு படுத்தியுள்ளார். 
Tags:    

Similar News