உலகம்
பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டது

இலங்கையில் 40 பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டது

Published On 2022-05-26 02:07 GMT   |   Update On 2022-05-26 02:07 GMT
கொழும்பு புறநகரில் 50 ஆயிரம் லிட்டர் எரிபொருளை பதுக்குவதற்கு சில்லரை விற்பனை நிலையம் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420, டீசல் ரூ.400 என்ற விலையில் விற்பனையாகிறது. ஒரு பக்கம் தட்டுப்பாடு, மற்றொரு பக்கம் விலை உயர்வு என இரு முனை தாக்குதலால் மக்கள் கோபம் கொண்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி மணிக்கணக்கில் காத்துக்கிடக்கவும் வேண்டியதிருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சில்லரை விற்பனை பெட்ரோல் நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்ததால் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாவட்டங்களில் 40 சில்லரை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் வினியோகஸ்தர் சங்கத்தை சேர்ந்த சாந்தா சில்வா தெரிவித்தார்.

கொழும்பு புறநகரில் 50 ஆயிரம் லிட்டர் எரிபொருளை பதுக்குவதற்கு சில்லரை விற்பனை நிலையம் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி, ஒட்டுமொத்த இருப்பையும் விலை உயர்வுக்கு முந்தைய பழைய விலையில் விற்பனை செய்ய உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News