உலகம்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு வழங்க தடை

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு வழங்க தடை

Published On 2022-05-05 12:16 IST   |   Update On 2022-05-05 12:54:00 IST
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சில பெண்கள் வாகனங்களை ஓட்டி வந்ததையறிந்த தலீபான்கள் தற்போது அங்கு பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு வழங்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூல்:

ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தனியாக பெண்கள் பயணம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. எந்த நேரமும் தலீபான்கள் வீதிகளில் துப்பாக்கியுடன் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

இதனால் ஒரு வித பீதியுடன் பொதுமக்கள் உள்ளனர். இந்த நிலையில்  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சில பெண்கள் வாகனங்களை ஓட்டி வந்தனர். இதையறிந்த தலீபான்கள் தற்போது அங்கு பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு வழங்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News