உலகம்
இம்ரான்கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது வழக்கு பதிவு

Published On 2022-05-02 03:48 GMT   |   Update On 2022-05-02 03:48 GMT
சவுதி அரேபியாவில் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து நடத்திய போராட்டத்தில் இம்ரான்கானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவர் கைது செய்யப்படுவார் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் :

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார்.

இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியா சென்றிருந்தபோது, அங்கு இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஷபாஸ் ஷெரீப்பை ‘திருடர்’, ‘துரோகி’ என கூறி கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீசார் இம்ரான்கான் மற்றும் முன்னாள் மந்திரிகள் பலர் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் இம்ரான்கானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவர் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தானின் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News