உலகம்
கென்யாவின் முன்னாள் பிரதமர் மவாய் கிபாகி

கென்யாவின் முன்னாள் அதிபர் மவாய் கிபாகி காலமானார்

Update: 2022-04-22 14:14 GMT
கென்யாவின் முன்னாள் அதிபர் மவாய் கிபாகி இறந்தது நாட்டிற்கு ஒரு சோகமான நாள் என்று தற்போதைய அதிபர் உஹூரு கென்யாட்டா தெரிவித்துள்ளார்.
கென்யாவின் முன்னாள் அதிபர் மவாய் கிபாகி தனது 90-வது வயதில் இன்று மரணமடைந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து கென்யாவின் தற்போதைய அதிபர் உஹூரு கென்யாட்டா கூறியதாவது:-

கென்யாவின் முன்னாள் அதிபர் மவாய் கிபாகி இறந்தது நாட்டிற்கு ஒரு சோகமான நாள். அவர் கென்யாவின் சிறந்த முன்னோடி  மற்றும் அரசியல்வாதி. அவர் ஒரு சிறந்த மனிதர். சிறந்த தேசபக்தர், சிறந்த விவாதக்காரர் மற்றும் நாட்டின் வளர்ச்சியை வழிநடத்தியவர்.  அவரது குடிமைப் பொறுப்பின் மரபு கென்யர்களின் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்..

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. பலுசிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்- பாகிஸ்தான் ராணுவ அதிகாரி உயிரிழப்பு
Tags:    

Similar News