உலகம்
தீர்ப்பு

கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்த பாகிஸ்தான் நீதிமன்றம்- இலங்கை வரவேற்பு

Published On 2022-04-22 11:14 GMT   |   Update On 2022-04-22 11:14 GMT
இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாக கூறி, 800க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தொழிற்சாலையில் இருந்து பிரியந்தா குமாரவை வெளியே இழுத்து கடுமையாக தாக்கி கொலை செய்தனர்.
கொழும்பு:

பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றிய இலங்கையைச்  பிரியந்த குமார, கடந்த டிசம்பர் மாதம் கொடூரமாக கொல்லப்பட்டார். இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாக கூறி, 800க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தொழிற்சாலையில் இருந்து பிரியந்தா குமாரவை வெளியே இழுத்து கடுமையாக தாக்கி கொலை செய்ததுடன், அவரது உடலை எரித்துள்ளனர்.

இரு நாடுகளிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. குற்றச்சாட்டுக்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் 100க்கும் மேற்பட்டோர் உடனே விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் மீது லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் முக்கிய குற்றவாளிகள் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 81 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை இலங்கை வெளியுறவுத்துறை வரவேற்றுள்ளது. 
Tags:    

Similar News