உலகம்
ஷபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற ஷபாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்கா வாழ்த்து

Published On 2022-04-13 22:38 GMT   |   Update On 2022-04-13 22:38 GMT
பாகிஸ்தானில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

பாகிஸ்தானின் 23-வது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். 

பிரதமராக பதவியேற்ற ஷபாஸ் ஷெரீப், அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம். ஆனால் காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு இல்லாமல் அது நடக்காது என தெரிவித்தார்.
 
இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஷபாஸ் ஷெரீபுக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷபாஸ் ஷெரீப் அவர்களுக்கு வாழ்த்துகள். 

பாகிஸ்தான் அரசாங்கத்துடன் நீண்டகால ஒத்துழைப்பைத் தொடர நாங்கள் விரும்புகிறோம். வலுவான, வளமான மற்றும் ஜனநாயக பாகிஸ்தானை நமது இரு நாடுகளின் நலன்களுக்கும் இன்றியமையாததாக அமெரிக்கா கருதுகிறது  என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News