உலகம்
ஈராக், நார்வே உள்பட 3 நாடுகளில் தூதரகங்களை மூடும் இலங்கை
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
கொழும்பு:
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், நிதிச்சிக்கன நடவடிக்கையாக 3 நாடுகளில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை முடிவெடுத்துள்ளது.
நார்வேயின் ஒஸ்லோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய நகரங்களில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஏப்ரல் 30-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை வெளியுறவுத்துறை முடிவெடுத்துள்ளது.