search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ராஜினாமா செய்த இலங்கை அமைச்சர் அலி சப்ரி
    X
    ராஜினாமா செய்த இலங்கை அமைச்சர் அலி சப்ரி

    இலங்கையில் புதிய திருப்பம்- நிதியமைச்சராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் அலி சப்ரி ராஜினாமா

    4 பேர் மந்திரிகளாக முதலில் பதவி ஏற்றனர். புதிய நிதி மந்திரியாக அலி சப்ரி அறிவிக்கப்பட்டு உள்ளார். வெளியுறவு மந்திரியாக பீரிஸ், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனா, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பதவி ஏற்றனர்.
    இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த தவறான பொருளாதார முடிவுகளால் அந்த நாட்டின் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்துவிட்டன. அதுமட்டுமின்றி அரிசி, கோதுமை, டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் ஒவ்வொரு நாளும் இதுவரை இல்லாத அளவுக்கு துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளதால் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    அதன்படி நேற்று முன்தினம் இரவு இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 26 அமைச்சர்களும் கூண்டோடு தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண புதிய காபந்து அமைச்சரவை உடனடியாக அமைக்கப்பட்டது.

    அதில் 4 பேர் மந்திரிகளாக முதலில் பதவி ஏற்றனர். புதிய நிதி மந்திரியாக அலி சப்ரி அறிவிக்கப்பட்டு உள்ளார்.  வெளியுறவு மந்திரியாக பீரிஸ், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனா, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பதவி ஏற்றனர்.

    இந்நிலையில், இலங்கையின் புதிய நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி 24 மணி நேரத்திற்குள் பதவி விலகியுள்ளார். இதனால் இலங்கை அரசில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்.. இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை: பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சியை ஒப்படைக்கத் தயார்- கோத்தபய ராஜபக்சே
    Next Story
    ×