உலகம்
சமூக வலைதளங்கள்

இலங்கையில் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம்

Published On 2022-04-03 02:23 GMT   |   Update On 2022-04-03 02:23 GMT
ஊரடங்கின்போது அத்தியாவசிய சேவைகளுக்காக தவிர இலங்கையர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு சிக்கியது. அத்தியாவசிய தேவைகளுக்கு பெரும்பாலும் இறக்குமதியை நம்பி இருந்த நிலையில், அன்னியச் செலாவணியில்லாததால், இறக்குமதி பாதித்தது. உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

மேலும், இலங்கையில் தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் தெருவில் இறங்கி போராடினார்கள்.

கடந்த 31-ம் தேதி கொழும்பு நகரில் அதிபர் மாளிகை முன் ஆயிரக்கணக்கானோர் கூடி அதிபருக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசி மக்களை விரட்டியடித்தனர். பலர் படுகாயம்  அடைந்தனர். 
50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் அவசர நிலையை அமல்படுத்தினார். நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாட்டில் போராட்டங்களைத் திட்டமிடுவதற்கு மக்களைத் திரட்டுவதைத் தடுக்கவும் சமூக வலைதளங்கை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது.

இதனால் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகத் தளங்களை இலங்கை அரசாங்கம் முடக்கியது.

Tags:    

Similar News