உலகம்
போப் பிரான்சிஸ்

கனடா பள்ளிகளில் நடந்த அநியாயத்துக்காக மன்னிப்பு கேட்ட போப் பிரான்சிஸ்

Published On 2022-04-02 02:42 GMT   |   Update On 2022-04-02 02:42 GMT
கனடாவில் கத்தோலிக்க திருச்சபை நடத்துகிற உறைவிட பள்ளிகளின் அருகே நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1000 பழங்குடி குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
வாடிகன் :

கனடாவில் கத்தோலிக்க திருச்சபை நடத்துகிற உறைவிட பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர்.

அந்தப் பள்ளிகளின் அருகே நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1000 பழங்குடி குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தின. இந்த அநியாயத்துக்காக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

வாடிகனில் நேற்று அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியபோது, “நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் என்பதை என் இதயத்தில் இருந்து உங்களுக்கு கூற விரும்புகிறேன். கனடா பேராயர்களுடன் இணைந்து நான் மன்னிப்பு கோருகிறேன்” என குறிப்பிட்டார்.

தான் கனடா செல்ல உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
Tags:    

Similar News