உலகம்
பீட்டர் பியலா

செக் குடியரசின் பிரதமருக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்

Published On 2022-03-30 02:13 GMT   |   Update On 2022-03-30 02:13 GMT
செக் குடியரசு நாட்டில் இதுவரை இங்கு 37 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 39 ஆயிரத்து 610 பேர் தொற்றால் இறந்துள்ளனர்.
பிராக் :

செக் குடியரசு நாட்டின் பிரதமராக இருப்பவர் பீட்டர் பியலா (வயது 57). இவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அவர் வீட்டில் 7 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொள்வார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “குறைந்தபட்சம் வீட்டில் இருந்தாவது எனது பணிக்கு திரும்ப விரும்புகிறேன்” என்று கூறி உள்ளார். இந்த நாட்டில் நேற்று ஒரு நாளில் 8,812 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை இங்கு 37 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 39 ஆயிரத்து 610 பேர் தொற்றால் இறந்துள்ளனர்.
Tags:    

Similar News