உலகம்
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு

பள்ளிவாசலில் தற்கொலை தாக்குதல்: பலி எண்ணிக்கை 57-ஆக உயர்வு

Published On 2022-03-04 13:42 GMT   |   Update On 2022-03-04 13:42 GMT
பெஷாவர் குண்டுவெடிப்புக்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரம், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. மசூதியில் ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக 30 பேர் உயிரிழந்ததாக கூறிய நிலையில், தற்போது 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் 200 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், இது ஒரு தற்கொலை தாக்குதல் என  பெஷாவர் காவல்துறை அதிகாரி ஹரூன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெஷாவர் காவல்துறை அதிகாரி ஹரூன் ரஷீத் கான் கூறியதாவது:-

பெஷவார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதிக்குள் கறுப்பு உடை அணிந்த இரண்டு பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். அங்கு, முதலில் காவலலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு பின் உள்ளே நுழைந்து மேலும் 6 பேரை சுட்டு உள்ளனர்.

அங்கிருந்து மசூதியின் பிரதான மண்டபத்திற்குள் நுழைந்து இருவரில் ஒருவர் மனித வெடிகுண்டாக மாறி வெடிக்கச் செய்துள்ளார். இதில் ஏராளமானோர் உடல் சிதறிக் கிடந்தனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.  

இவ்வாறு அவர் கூறினார்.

பெஷாவர் குண்டுவெடிப்புக்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது மாகாண தலைமைச் செயலாளர் மற்றும் ஐஜியிடம் சம்பவம் குறித்து அறிக்கை கோரியுள்ளார்.

இதையும் படியுங்கள்.. உக்ரைனின் அணுமின் நிலையத்தை கைப்பற்றியது ரஷிய படைகள்- 3 வீரர்கள் பலி
Tags:    

Similar News