உலகம்
உக்ரைன்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும்- அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்

Published On 2022-03-01 15:05 IST   |   Update On 2022-03-01 15:05:00 IST
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தில் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகும் விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார். இது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் நிகி போரோ கூறும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தில் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார்.

இது வரலாற்று பூர்வ ஆவணம். இந்த ஆவணத்தில் பாராளுமன்ற சபாநாயகர் ஸ்டீபன்சுக்கு மற்றும் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் ஆவதற்கும் மற்றும் பாதுகாப்புக்காகவும் உக்ரைன் மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளது’ என்றார்.

இது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ‘ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

Similar News