உலகம்
உக்ரைன் எல்லையில் வாட்டி வதைத்த கடும் குளிரில் 20 மணிநேரம் தவித்த மாணவர்கள்

உக்ரைன் எல்லையில் வாட்டி வதைத்த கடும் குளிரில் 20 மணிநேரம் தவித்த மாணவர்கள்

Published On 2022-02-27 06:03 GMT   |   Update On 2022-02-27 06:03 GMT
உக்ரைன் எல்லையில் உள்ள சோதனை முகாம்களுக்கு செல்ல கடும் சிரமங்களை சந்தித்தாக லீவிவ் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்காக இந்திய மாணவர்கள் ருமேனியா, அங்கேரி, போலந்து ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு சென்றுள்ளனர்.

தற்போது அங்கு கடும் குளிர் வாட்டி வருகிறது. உக்ரைன் எல்லைக்கு சென்ற இந்திய மாணவர்கள் 20 மணிநேரம் கடும் குளிரில் தவித்து உள்ளனர்.

உக்ரைனில் படிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் போலந்து நாட்டுக்குள் செல்வதற்காக உக்ரைனில் உள்ள ஷெஹினி- மெடிக்கா எல்லைக்கு புறப்பட்டனர்.

ஆனால் எல்லையில் உள்ள சோதனை முகாம்களுக்கு செல்ல கடும் சிரமங்களை சந்தித்தனர். இது குறித்து லீவிவ் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் கூறியதாவது:-

நாங்கள் கடந்த 25-ந்தேதி காலை எல்லையை அடைந்தோம். ஆனால் எல்லையில் உள்ள சோதனை முகாம்களுக்கு வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும். வாகன வசதி ஏதும் கிடைக்கவில்லை.

லீவில் நகரில் இருந்து ஷெஹினி பகுதி 80 கி.மீட்டர் தொலைவில் இருந்தது. முதலில் அங்கு செல்ல வாகனங்களில் புறப்பட்டோம். பின்னர் 20 கி.மீட்டர் நடந்தே சென்று அப்பகுதியை அடைந்தோம். அங்குள்ள தங்கும் இடங்களுக்கு சென்ற போது பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவித்தனர்.

இதனால் நாங்கள் வெளியேயே கடும் குளிரில் தவித்தபடியே இருந்தோம். மற்ற தங்கும் இடங்கள் அங்கிருந்து 10 கி.மீட்டர் தொலைவில் இருந்தன. இதனால் குளிரில் வெளியே நின்று கொண்டிருந்தோம்’’ என்றனர்.
Tags:    

Similar News