உலகம்
ஜோ பைடன், விளாடிமிர் புதின்

உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளில் பொருளாதார தடை - அமெரிக்கா நடவடிக்கை

Published On 2022-02-22 08:04 IST   |   Update On 2022-02-22 08:04:00 IST
உக்ரைன் விவகாரத்தில் புதின் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:

ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் விவகாரம் ஐரோப்பிய நாடுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சி யாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை தனி நகரங்களாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அங்கீகரித்தார். 

இது அமைதி பேச்சுவார்த்தையை முறியடிக்கும் நடவடிக்கை என்று உக்ரைன் அதிபர்  வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தெரிவித்துள்ளார். 

புதின் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேலும் உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளில் பொருளாதார தடைகளை அவர் விதித்துள்ளது. புதிய முதலீடு, வர்த்தகம் ஆகியவற்றிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

முன்னதாக உக்ரைன் அதிபருடன், அமெரிக்க அதிபர் பேசியதாகவும், அப்போது உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை காக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக பைடன் கூறியுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar News