உலகம்
பயங்கரவாதி

தற்கொலை பயங்கரவாதிகளை ராணுவத்தில் சேர்த்த தலிபான்கள்

Update: 2022-01-07 06:11 GMT
ஐ.எஸ். இயக்கத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலிபான் அரசு தற்கொலைப்படை பயங்கரவாதிகளை ராணுவத்தில் சேர்த்து வருகின்றனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். இதையடுத்து அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.

பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கக் கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்கள். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது தலிபான் அரசு மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைவதற்கு முன்பு வரை பயங்கரவாதிகள் குழுவாக இயங்கி வந்தனர்.

அவர்களில் ஒரு அங்கமாக தற்கொலைப்படை தாக்குதல் பயங்கரவாதிகள் இடம் பெற்று இருந்தனர்.

சுமார் 20 ஆண்டுக்கு மேலாக ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்பு இந்த பயங்கரவாதிகள் அமெரிக்கா படை மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் பரவலாக இயங்கி வரும் தீவிரவாத குழுக்களின் பயங்கரவாதிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடிவு செய்து அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.எஸ். இயக்கத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலிபான் அரசு தற்கொலைப்படை பயங்கரவாதிகளை ராணுவத்தில் சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு ராணுவத்தில் முக்கிய பொறுப்பு கொடுக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News