உலகம்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சேத விவரம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
காபூல்:
ஆப்கானிஸ்தான் பைசாபாத் நகரில் இருந்து சுமார் 33 கி.மீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை சுமார் 3.47 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோல்படி 4.8 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் போது பொது மக்கள் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தனர். இதில் சேத விவரம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.