செய்திகள்
அதிபர் ஜோ பைடன்

ஈராக் பிரதமர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

Published On 2021-11-07 19:54 GMT   |   Update On 2021-11-07 19:54 GMT
டிரோன் தாக்குதல் குறித்து பிரதமர் முஸ்தபா -அல்- காதிமி டுவிட்டரில் பதிவிடுகையில், தான் நலமாக இருப்பதாகவும் கடவுளுக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.
வாஷிங்டன்:

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் ஈராக் பிரதமர் முஸ்தபா- அல்-காதிமியின் வீடு உள்ளது. மேலும் இங்கு அமெரிக்க தூதரகம், முக்கிய தலைவர்களின் வீடுகள் உள்ளன. 

நேற்று அதிகாலை ஈராக் பிரதமர் முஸ்தபா - அல்- காதிமியின் வீடு மீது டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் காயமடைந்தனர். ஈராக் பிரதமரை கொல்ல நடந்த வெடிகுண்டு தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

இந்நிலையில், ஈராக் பிரதமர் வீடு மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக, ஐ.நா.சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News