செய்திகள்
கொரோனா பரிசோதனை

ரஷ்யாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்தது

Published On 2021-02-26 18:56 GMT   |   Update On 2021-02-26 18:56 GMT
ரஷ்ய நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மாஸ்கோ:

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், ரஷ்யாவில் மேலும் 11,086 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42,23,186 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு ஒரே நாளில் 428 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 85 ஆயிரத்து 304 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 37.83 லட்சத்தைக் கடந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News